Slim Aishwarya Rai Slim Stills for new ads

[postlink]http://plythroug.blogspot.com/2012/08/slim-aishwarya-rai-slim-stills-for-new.html[/postlink]http://www.youtube.com/watch?v=DiGz5rt3WXoendofvid [starttext]
ஐஸ்வர்யா... மறுபடியும் சிக்கென்று மாறினார்!
மும்பை: ஐஸ்வர்யா ராய் மறுபடியும் தனது சிக் அழகைப் பிடித்து விட்டார். ஒரு நகைக் கடை விளம்பரத்திற்காக அவர் கொடுத்துள்ள போஸ் வெளியாகியுள்ளது. குழந்தை பெற்ற பிறகு குண்டாக காணப்பட்ட ஐஸ்வர்யா, இதில் முன்பை விட பொலிவாக, படு க்யூட்டாக, கம்பீரமாக காணப்படுகிறார்.


ஐஸ்வர்யாவுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் வழக்கமாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் உடல் மாற்றங்கள் ஐஸ்வர்யாவுக்கும் நிகழ்ந்தன. இதனால் அவர் குண்டாக காணப்பட்டார்.

ஆனால் தற்போது படு அழகாக அவர் மாறியுள்ளார். முன்பை விட பொலிவாக, தேவதை போல காணப்படுகிறார். உடம்பைக் குறைத்து சிக்கென்று மாறியுள்ள ஐஸ்வர்யா, ஒரு நகை விளம்பரத்திற்காக கொடுத்துள்ள விளம்பரப் படம் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

கடந்த 2 வராமாக இந்த விளம்பரப் படத்திற்காக நடித்து வருகிறாராம் ஐஸ்வர்யா. நாடு முழுவதும் டிவிகள் மற்றும் நாளிதழ்களில் இந்த விளம்பரம் வெளியாகிறது. ஐஸ்வர்யா விளம்பரப் படத்தில் நடித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யாவை புகைப்படம் மற்றும் வீடியோப் படம் எடுத்த கிரண் தியோஹன்ஸ் கூறுகையில், ஜோதா அக்பர் படத்தின்போது நான் ஐஸ்வர்யாவுடன் இணைந்து பணியாற்றினேன். அப்போது பார்த்த அதே ஐஸ்வர்யாவையே இப்போதும் பார்க்கிறேன். அவருடைய அழகில் சற்றும் மாற்றம் இல்லை. மிகவும் தொழில் முறையிலான கலைஞர் அவர். ஒப்பற்ற திறமை படைத்தவர். அவர் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால், மற்றவர்கள் எல்லாம் அவருக்குப் பின்னால்தான். அப்படி ஒரு கவர்ச்சி அவரிடம் உள்ளது. ஐஸ்வர்யாவைப் போன்ற அழகான எந்தப் பெண்ணையும் இதுவரை நான் பார்த்ததில்லை என்றார்.
[endtext]

0 comments:

Post a Comment